கடவுள் மாதிரி வந்து காப்பாத்திய வாட்ச்..
கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்சால் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியரித்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் எலெக்ட்ரிக் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக வந்த ஆம்புலன்ஸ் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றது. அந்த நபரின் உடலில் பல்ஸ் குறைந்து வருவதை கண்டறிந்த ஆப்பிள் வாட்ச், தானாகவே 911 என்ற எமர்ஜென்சி எண்ணுக்கு டயல் செய்துள்ளது.
இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் ஆம்புலன்ஸின் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முகமது பிட்ரி என்பவர் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரது உடம்பில் பல்ஸ் குறைவதை அறிந்த ஸ்மார்ட் வாட்ச் உடனே போலீசாருக்கு மெசேஜ் அனுப்பி காப்பாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.