ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா ரஷ்யா மோதல்…
நியூயார்க்:பொருளாதார தடை விதிப்பு தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் காரசாரமாக மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. ரஷ்யா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், நாடுகள் மீதான பொருளாதார தடையால் ஏற்படும் பயன்கள் மற்றும் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.