என்ஜின் கவர் இன்றி பறந்த விமானம்!!!

மும்பை விமான நிலையத்திலிருந்து இன்று காலை அலையன்ஸ் ஏர் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. 4 ஆண்டு பழமையான இந்த விமானத்தில் சுமார் 70 பயணிகள் இருந்தனர். விமானம் பாதுகாப்பாக புஜ் நகரில் தரையிறங்கியது. மும்பை விமான நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு விமானம் புறப்பட்டபோது, என்ஜின் கவர் ஓடுபாதையில் விழுந்தது. விமானம் புறப்பட்ட பிறகு ஓடுபாதையில் இருந்து அந்த கவர் கண்டெடுக்கப்பட்டது என மும்பை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.