உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: கோடீஸ்வர வேட்பாளர்கள்!!!

உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிகபட்ச சொத்து மதிப்பு 123 கோடி ரூபாயாகவும், குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் அந்திரிகேஷ் சைனி தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனக்கு 123 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். கார்வால் தொகுதியில் இடதுசாரி கட்சி வேட்பாளர் சந்தீப் குமார் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ள தொகை வெறும் ஆயிரம் ரூபாய். மொத்த வேட்பாளர்களில் 252 பேர் கோடீஸ்வரர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.