நீத்தார் கடன் தீர்க்கும் மகாரதசப்தமி……..

இன்று(8.2.2022) சூரிய சந்திராள் விரதம், நீத்தார் கடன் தீர்க்கும் மகாரதசப்தமி

ரத சப்தமி என்பது சூரியனை வணங்கும் தினமாகும். நோயற்ற வாழ்வும், நிறைவான செல்வமும் கிடைக்க, அரசு பணி கிடைக்க, அரசு பணியில் பதவி உயர்வு பெற, கண் பார்வை சிறப்பாக இருக்க, தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர ரதசப்தமி வழிபாடு மிகவும் பயன்தரும். காலையில் நீராடும் போது எருக்க இலை மீது அட்சதை அல்லது எள், திருநீறு, மஞ்சள் வைத்து குளித்தால் நமது பித்ருக்கள் அனைவருக்கும் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும்.

எருக்கை இலை வைத்து நீராடுவது நல்லது. 7 எருக்கை இலையில் மீது சிறிது எள், திருநீறு வைத்துக் கொண்டு ஆண்கள் நீராட வேண்டும். பெண்கள் எருக்கை இலை, எள், மஞ்சள் வைத்து குளிக்க வேண்டும். இதனால் நீத்தார் கடன் செய்த புண்ணியம் கிடைக்கும். இப்படி நீராடுவதால் பீஷ்மருக்குத் தர்ப்பணம் செய்த புண்ணியம் கிடைக்கும். இதனால் பீஷ்மர் அருளாசி கிடைக்கும்.

உங்களுக்கு எருக்கை இலை கிடைக்கவில்லை என்றால், கவலை வேண்டாம். எள், திருநீறு கிடைக்கும் அதை வைத்து எருக்கை இலை இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டு கையில் பிடித்து குளித்து சூரியனை வழிபடுவது அவசியம்.

வெளிநாட்டில் அல்லது நீர் நிலை அருகில் இல்லாதவர்கள், வீட்டிலேயே எள், திருநீறு வைத்து பீஷ்மரை மனதில் நினைத்து நீராடுதல் நல்லது
இந்தப் பதிவை உங்கள் உறவுகள் நண்பர்களுக்கு தயவு செய்து அனுப்பி வையுங்கள்

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சங்கரமூர்த்தி… 7373141119