“நீட் தேர்வு அல்ல; பலிபீடம்” – முதல்வர் ஸ்டாலின்
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக சட்டசபையில் விவாதிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து நீட் விலக்கு மசோதா மீதான விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘’கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்ட, கல்வி உரிமையை மீட்டெடுக்க இன்று நாம் கூடியுள்ளோம். நீட் என்ற சமூக அநீதியை அகற்ற இந்த சட்டமன்றத்தால்தான் முடியும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூக நீதியை நிலைநாட்டிட இந்த சட்டமன்றத்தில் கூடியுள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தால் உருவானதல்ல நீட் தேர்வு. நீட் தேர்வு விலக்கிற்காக மட்டுமல்ல; இந்த சட்டமன்றத்தின் இறையாண்மையை காக்க, சமூக நீதியை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.