தேசியக் கொடி இறக்கிவிட்டு, காவி கொடி ஏற்றிய மாணவனால் பரபரப்பு…..
கர்நாடகாவில் உள்ள சிவமோகாவில் ஒரு கல்லூரியில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை அகற்றிவிட்டு காவிக் கொடியை மாணவர் ஒருவர் கட்டிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஹிஜாப் அணிந்து கொண்டு வந்தால் நாங்கள் காவி துண்டு அணிவோம் என கூறி இந்து மாணவர்கள், மாணவிகள், கழுத்தில் காவி துண்டை அணிந்து வருகிறார்கள். நேற்று வரை நண்பர்களாக பழகி வந்த இந்த மாணவர்கள் மனதில் திடீரென இந்த மத பாகுபாடு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.