தமிழகம்- கர்நாடகா இடையே சுமூக முடிவு எட்டினால் மட்டுமே மேகதாது அணை.. மத்திய அரசு திட்டவட்டம்
தமிழகம்- கர்நாடகா இடையே சுமூக முடிவு எட்டினால் மட்டுமே மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு தாக்கல் செய்து அதற்காக ரூ 25 கோடி நிதி ஒதுக்கியது. இதையடுத்து 2018ஆம் ஆண்டு மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசு தாக்கல் செய்த திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இந்த ஒப்புதலை திரும்ப பெற வேண்டும் என அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முடியாது என காவிரி மேலாண்மை வாரியம் தெரிவித்தது. கர்நாடகா: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மேகதாது அணைக்காக 11 நாள் பாதயாத்திரையை தொடங்கியது காங்.2019ஆம் ஆண்டுகர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. “மேகதாதுவில் அணை கட்டி 66 டிஎம்சி தண்ணீரை தேக்கினால் தமிழகத்திற்கு தண்ணீர் வராது, தமிழகம் பாலைவனமாகிவிடும்” என திமுகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கர்நாடக மாநில முதல்வராக இருந்த எடியூரப்பா, மேகதாது அணை கட்ட ஒத்துழைப்பு அளிக்குமாறு கடிதம் எழுதியிருந்தார்.முதல்வர் ஸ்டாலின் பதில்இதற்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய பதில் கடிதத்தில் மேகதாது அணை கட்டுவதால் தமிழக மக்களுக்கு ஏற்படும் துன்பங்களை குறிப்பிட்டு, மேகதாது அணை கட்டும் முடிவை கைவிடும்படி தெரிவித்திருந்தார். இதை மறுத்த கர்நாடகா மேகதாது அணை கட்டியே தீருவோம் என தெரிவித்திருந்தது.புதிய முதல்வர்கர்நாடகாவில் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார். அவர் சட்டசபையில் பேசிய போது மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு உறுதியாக உள்ளது. ரூ.9 ஆயிரம் கோடியில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையை கட்ட திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்திற்கு காவிரி நிர்வாக ஆணையத்தின் அனுமதியை கேட்டுள்ளோம். திட்ட அறிக்கையை அந்த ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம்.ஒப்புதல் பெற முயற்சிஅதேபோல் மத்திய நீர் ஆணையம், சுற்றுச்சூழல்-வனத்துறையின் ஒப்புதல் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மேகதாது அணை கட்டத் தேவையான அனுமதியை பெறுவேன் என உறுதியளித்திருந்தார். மேகதாது அணை கட்டும் பணிகளை விரைந்து தொடங்க கோரி காங்கிரஸ் கட்சி மேகதாது முதல் பெங்களூரு வரை பாதயாத்திரை தொடங்கி கொரோனா பரவலால் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. தமிழக அரசு அனுமதி தராவிட்டாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது.மத்திய திட்டவட்டம்இந்த நிலையில் மேகதாது அணை கட்ட எப்போது அனுமதி என கர்நாடகா எம்பி மக்களவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் அஷ்வினிகுமார் சவுபே பதில் அளிக்கையில் தமிழகம்- கர்நாடகா இடையே சுமூக முடிவு எட்டினால் மட்டுமே மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார்.