சுற்றுலா பயணிகளுக்கு ஆஸ்திரேலியா அனுமதி ….

ஆஸ்திரேலிய அரசு, சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆஸ்திரேலியா செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், வரும் 21ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைக்கு ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் அனுமதி அளித்துள்ளார். மேலும், சுற்றுலா பயணிகள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.