உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை!

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 39.79 கோடியாக உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை  57.67 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றிலிருந்து 31.73 கோடி பேர் குணமடந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 1.35 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 1,123 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.  ஒரே நாளில் பிரான்சில் 46 ஆயிரம், ஜெர்மனியில் 1.38 லட்சம், ரஷ்யாவில் 1.71 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் திடீரென கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளன. நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,173 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.