லதா மங்கேஷ்கர் மறைவுக்கு 7 மாநிலங்களில் அரசு விடுமுறை அறிவிப்பு…

லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி 7 மாநிலங்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒருநாள் அரசு விடுமுறை மகாராஷ்டிராவில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசு, அடுத்து வரும் 15 நாட்களுக்கு நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகளில், லதா மங்கேஷ்கரின் பாடல்களை ஒலிபரப்புமாறு உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச அரசு 2 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களுக்கு மூவர்ணக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். 2 நாட்கள் அரசு விடுமுறையை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கோவா அரசு 3 நாட்கள் அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.