ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. ஆளுநரின் இச்செயலுக்கு பல கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மாணவ அமைப்புகளும், இயக்கங்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி, இடது தொழிற்சங்க மய்யம், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், மக்களுக்கான மாணவர்கள், மக்களுக்கான இளைஞர்கள், பெண்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் பங்கேற்றன. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.