பஞ்சாப் தேர்தல் – ராகுலின் சாய்ஸ் யார்?
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக யார் களமிறங்க போகிறார்கள்? என்பதை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வருகிற ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.5 ஜி என சொன்ன நிர்மலா சீதாராமன்.. அப்போ பிஎஸ்என்எல்? கோஷமிட்ட எதிர்க்கட்சிகள்! பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. பிப்ரவரி 14 -ம் தேதி பஞ்சாப் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் 117 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.பஞ்சாப் சட்டசபை தேர்தல்இந்த முறையும் ஆட்சியை தக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை தட்டி பறிக்க வேண்டும் என்று பாஜக துடியாய் இருக்கிறது.ஒருபக்கம் ஆம் ஆத்மியும், சிரோமணி அகாலிதளமும் களத்தில் இருக்கிறது. முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் லோக் காங்கிரஸ் கட்சியும் பாஜக பக்கம் நிற்கிறது. இந்த கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் ஏற்கனவே பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.முதல்வர் வேட்பாளர் யார்?பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சரண்ஜித் சிங் சன்னி சம்கவுர் சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றும் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் யார் முதல்வர் வேட்பாளர்? என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. அங்கு தற்போது அனைவரின் பார்வையும் யார் முதல்வர் வேட்பாளராக வருவார் என்பதுதான்.ராகுல் காந்தி முடிவுவரும் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அன்றைய தினம் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி லூதியானாவுக்குச் செல்கிறார். அப்போது அவர் முதல்வர் வேட்பாளராக யார்? என்பதை அறிவிப்பார் என்வும் தகவல்கள் உலா வருகின்றன. தற்போது முதல்வராக உள்ள சரண்ஜித் சிங் சன்னி மிக குறுகிய காலமே முதல்வராக இருந்திருந்தாலும் காங்கிரஸ் தலைமையிடம் மனதிலும், மக்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.யாருக்கு செல்வாக்கு?மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் காங்கிரஸ் தலைமையிடம் நல்ல பெயர் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சரண்ஜித் சிங் சன்னி-நவ்ஜோத் சிங் சித்து இடையே கடும் போட்டி நிலவுகிறது. பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் குறித்து மக்களிடமும் கருத்து கேட்டு வருகிறது கோன் காங்கிரஸ். அதாவது மாநில காங்கிரஸ் சார்பில் சார்பில் மக்களுக்கு செல்போன் அழைப்பு வருகிறது.மக்களிடம் கருத்து கேட்கும் காங்கிரஸ்அந்த அழைப்பில் சரண்ஜித் சிங் சன்னி முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஒன்றை அழுத்தவும் என்றும் நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் என்று விரும்பினால் இரண்டை அழுத்தவும் என்றும் முதல்வர் வேட்பாளர் இல்லாமல் காங்கிரஸ் தேர்தலை சந்திக்க சந்திக்க வேண்டும் என்று விருப்பினால் மூன்றை அழுத்தவும் என்று பஞ்சாபி மொழியில் பதிவுசெய்யப்பட்ட குரல் ஒலிக்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.