மேன்மை – நேர்மையை பாராட்டிய நிகழ்வு- காவல்துறை அதிகாரி கே.கே.முத்துச்சாமியின் டைரிக்குறிப்பு!!!

என்னை வியக்க வைத்த அமைச்சர் சாதிக்பாட்சா அவர்கள்!! கோவை நகர் சட்டம் ஒழுங்கு dspயாக பொறுப்பேற்றதும்(அப்போது கோவை நகர் முழுவதற்கும் ஒரு L&O,ஒரு கிரைம் DSP மட்டுமே)கள்ளச்சாராய விற்பனை செய்பவர்கள், ஜேப்படி திருடர்கள், ரௌடிகள்,விபச்சாரிகள், சூதாட்ட விடுதி நடத்துபவர்கள் முதலியோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நகர் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.ஆனால் ஜேப்படித் திருடர்களின் கொட்டம் அவ்வளவு சுலபமாக அடங்கவில்லை.அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி “கடும்” நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.”கடும் ” என்பதற்கு நம் FB நண்பர்கள் எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்.காவல்துறை நண்பர் C. அய்யர்சாமிஅவர்கள் “நீங்கள் குற்றவாளிகளுக்குக் கொடுத்த தண்டனை அரபுநாட்டு தண்டனையைவிடக் கடுமையானது”என்று என் ஒரு பதிவிற்கு comment போட்டது மிகை என்றாலும் கொஞ்சம் உண்மையாகவும் இருக்கலாம்.அப்போதைய சட்ட அமைச்சர் திரு. சாதிக்பாட்சா அவர்கள் ஒரு நாள் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி மத்திய சிறைக்கு விசிட் வந்தார்.DIG திரு.காளிமுத்து ,SP.திரு.CV. ராவ் மற்றும் நானும் உடன் சென்றோம்.அமைச்சர் கைதிகளின் குறைகளைக் கேட்க,என் முன்னேற்பாடாக பின் வரிசையில் உட்காரவைக்கப்பட்டிருந்த பிக்- பாக்கெட் கைதிகளில் சிலர் covict warder களின் தடுப்பையும் மீறி ஓடிவந்து மந்திரியிடம் தங்களை நான் மிகவும் கொடுமைப்படுத்துவதாகப் புகார் கூறினார்கள்.அதுவும் மனோகரன் என்ற கொடிய ஜேப்படித்திருடன் தன்மீதள்ள பழைய தழும்புகளையெல்லாம் காட்டி நான் அடித்ததால் ஏற்பட்டவை என்றான். DSP மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து இதுபற்றிக்கேட்டார்.அவன் சுமார் ஐம்பது கேஸில் சம்மந்தப்பட்டிருப்பது,ஜேப்படி செய்தபோது பிடிக்கமுயன்ற தாசில்தார் ஒருவரையும் டிராபிக்போலீஸ்காரர் ஒருவரையும் பட்டன் கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டது பற்றியெல்லாம் சொல்லி அவன்தான் கோவையில் No.1 பிக் பாக்கெட் என்றேன்.அவனை வரவழைத்து “நீ தான் கோவையில் நெம்பர் 1 பிக்பாக்கெட்டாமே,போலீஸ்காரர் தாசில்தாரையெல்லாம் பட்டன் கத்தியால் குத்திவிட்டாயாமே” என்று கேட்டார். ஓட்டைக்காது செல்வன்தான் நெம்பர் ஒன் திருடன்.தினமும் ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் ஜேப்படி அடித்து விடுவான்.நான் 3,4 க்குள் வருவேன்.இந்த dsp செல்வன் காதில் பெருவிரல் பூதுர அளவுக்கு ஓட்டைபோட்டு ஜேப்படி செய்ய வெளியே செல்லமுடியாமல் கெடுத்துவிட்டார் என்றதுடன் நான் ஏற்படுத்தியாகச் சொல்லி தன் முகம் கைகால்களில் உள்ள காயத்தழும்புகளைக்காட்டினான்.நான் அவன் சட்டையை தூக்கிப்பிடித்து காட்டினேன்.வயிறு முழுதும் வரிவரியாகத் தழும்புகள்.இத்தனையும் இந்த dsp அடித்ததா என்று கேட்டார். ஜேப்படி செய்யும் போது தப்பிக்க முதலில் பட்டன் கத்தியால் குத்திவிட்டு தப்பப்பார்ப்போம் முடியாவிட்டால் பிளேடை மென்று பிடித்தவர் முகத்தில் துப்புவோம் அப்படியும் முடியாவிட்டால் எங்கள் வயிற்றை ரத்தம் வர பேளேடால் அறுத்துக்கொள்வோம், ரத்தத்தைபார்த்து, பிடித்தவர்கள் பயந்து எங்களை விட்டு விடுவார்கள், போலீசும் இவன் செத்துக்கித்து தொலைத்தால் நமக்குத் தான் வம்பு என்று எங்களைப் போகச்சொல்லிவிடுவார்கள், அப்படிப்பிடிபட்டபோது நானாக அறுத்துக் கொண்டது தான் இந்த தழும்புகள் என்று சொல்லி,இந்த dsp வந்த பிறகு வயிற்றில் பிளேடு போட்டுக் கொண்டவர்களையும் பிடித்துப் போய் பொம்பளைப்போலீஸை வைத்து காயத்துக்கு பச்சைமிளகாய் அரைத்து கட்டுப்போட்டுவிடுகிறார்,உயிர்போர வலி ஏற்படுகிறது லாக்கப்பில் சோறு போடாமல் வாழைஇலையைத்தான் கொடுக்கிறார் என்று அடுக்கடுக்கான புகார்களைக்கூறிவிட்டு இந்த dsp யை உடனே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தான்.மந்திரியின் முகம் இறுக்கமாக காணப்பட்டது. கைதியைப்போகச்சொல்லிவிட்டு, கோவையில் ஜேப்படி த் திருடர்களின் அட்டகாசம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் ஒரு திருடனின்வாயாலேயே அவர்களின் செயல்பாடுகளைக்கேட்டபிறகு அவர்கள் மீது போலீஸார் எடுக்கும் எந்த நடவடிக்கையும் தவறானது அல்ல என்றதுடன் ” முத்துசாமி இனிமேல் வயிற்றை கிழித்துக் கொண்ட நபருக்கு நீங்களே மேலும் ஒருபலமான அறுப்பு போட்டு குடல் வெளிவந்து சாகடியுங்கள் தவறே இல்லை என்றார்.அவரின் கோபத்திற்கு காரனம் அவன் தாசில்தார் மற்றும் காவலரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியதைப் பெருமையாகக் கூறியதும் பட்டன் கத்தியை நான் இயக்கிக் காட்டியதுமேயாகும்.மந்திரி சென்றபிறகு SPஅவர்கள் நீங்கள் ஏன் crime மேட்டரில் தலையிடுகிறீர்கள்,கிரைம் dspன அம்ஜெட்ஜெட்டி எதற்கு இருக்கிறார்? எனக்குப் பிரச்சினைகளை ஏற்படுய்திவிடுவீர்கள் போல் தெரிகிறதே என்றார்.நான் prevention of crime is one of the prime duties of the L&O staff சார் என்றதை sp ஏற்றுக்கொள்ளவில்லை.DIG அவர்கள் தலையிட்டு Mr.ராவ் நாம் இருவரும் இரவு நன்றாக தூங்குவதற்கு முத்துசாமி எடுக்கும் கடும் நடவடிக்கைகளே காரணம் ,பிரச்சினைகள் வந்தால் அவரே சமாளித்துக்கொள்வார்.மந்திரியே பாராட்டிவிட்டார், கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.மந்திரி அவர்கள்,செல்வனுக்கு காதில் ஓட்டை போட்டதை மனோகரன் விவரித்தபோது மட்டும் கொஞ்சம் சிரித்துவிட்டார்.சாதிக் பாட்சா அவர்கள் எந்தவிதமான ஊழல் புகாருக்கும் இடம்கொடுக்காமல் எளிய வாழ்க்கை வாழ்பவர் என்று கேள்விப்பட்டுள்ளேன். கிரிமினல்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஆதரவு கொடுப்பவர் என நேரடியாகத் தெரிந்ததும் அவர் மீது எனக்கு அளவு கடந்த மரியாதை ஏற்பட்டது உண்மையே!
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சங்கரமூர்த்தி…. 7373141119.