ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது!!!!
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேற்கு இந்திய தீவுகளில் 14வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பத்தொன்பது வயதிற்கு உட்பட்டோருக்கான இந்த போட்டியில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆப்கனிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. இப்போட்டியின். அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கனிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து, 290 ரன் எடுத்தது. இந்திய அணியின் கேப்டன் யாஷ்துல் 110, ஷேக் ரசீத் 94 ரன்கள் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 41.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. இப்போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.