பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் நேரத்தில் மாற்றம்!!!
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை வழியாக சென்னை வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மின்சார என்ஜின் பொருத்துவதற்காக நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரெயில் தற்போது செங்கோட்டையில் இருந்து திண்டுக்கல் ரெயில் நிலையம் வரை டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது. அங்கிருந்து, மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு சென்னை வரை இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திண்டுக்கல் வரை மின்சார என்ஜினும், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை வரை டீசல் என்ஜினும் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த நிலையில், மதுரை ரெயில் நிலையத்தில் இந்த ரெயிலில் மின்சார என்ஜின் பொருத்தி இயக்குவதற்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற 4-ந் தேதி முதல் சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரெயில் (வ.எண்.12661) திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு பதிலாக அதிகாலை 3.10 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மதுரையில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு பதிலாக மாலை 4.25 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் ரெயில் (வ.எண்.12662) வருகிற 5-ந் தேதி முதல் மதுரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு பதிலாக 9.50 மணிக்கு புறப்படும். திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு பதிலாக 10.50 மணிக்கு புறப்படும்.
மதுரையில் இருந்து சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 4-ந் தேதி முதல் மதுரையில் இருந்து இரவு 9.25 மணிக்கு பதிலாக இரவு 9.30 மணிக்கு புறப்படும். புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16730) வருகிற 4-ந் தேதி முதல் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.40 மணிக்கு பதிலாக அதிகாலை 3.30 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கத்தில் திருப்பரங்குன்றத்தில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு பதிலாக அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மதுரைக்கு அதிகாலை 5.35 மணிக்கு பதிலாக அதிகாலை 5.10 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.