ரஷ்ய அதிபர் மீது பொருளாதார தடை?
ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் மீது பொருளாதார தடை விதிக்க தயாராகி வருவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் தற்போது படைகளை குவித்து வரும் ரஷ்யா, உக்ரைனுக்குள் நுழையும் பட்சத்தில் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதே போல் பிரிட்டன் அரசும், உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணத்தை ரஷ்யா கைவிடாவிட்டால் ரஷ்யா மீது கடுமையான பல்வேறு வகையான பொருளாதார தடைகளை விதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. அப்படி பொருளாதார தடைகள் விதிக்கப்படும் பட்சத்தில் அது ரஷ்யாவிற்கு மட்டுமின்றி உலகளாவிய வணிகத்தில் பெரும் பாதிப்பையும், சிக்கலையும் ஏற்படுத்தும் என ரஷ்ய அரசு பதிலளித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம்.