காவல் ஆய்வாளர் திருமதி மகுடீஸ்வரி அவர்களுக்கு பாராட்டு!
சென்னை திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட கேளம்பாக்கம் பகுதி அருகில் ஒரு மாத குழந்தை கடத்திசெல்லப்பட்டது பிறகு E8 காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திருமதி மகுடீஸ்வரி அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது இந்தப் புகார் அடிப்படையில் நான்கு மணி நேரத்தில் கடத்திசெல்லப்பட்ட ஒரு மாத குழந்தையை மீட்டெடுத்து தாயாரிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு மு.ரவி அவர்கள் பாராட்டினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குமார்.