வாட்ஸ்அப் புது அம்சம்!!!!!!!!!!!!!!!!

இனி யார் மெசேஜ் அனுப்பினாலும் நீங்க டெலிட் செய்யலாம். வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தேவையை அறிந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி சமீபத்திய அம்சமாக அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குழுவில் வரும் மெசேஜ்களை நீக்குவதற்கு அதன் அட்மின்களுக்கு அதிகாரம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஒரு குழுவில் யார் மெசேஜ் அனுப்பினாலும் அதை அட்மினால் நீக்கம் செய்ய முடியும் என கூறப்படுகிறது. இது குழு நிர்வாகியால் நீக்கப்பட்டது என திரையில் ஒரு குறிப்பு மட்டும் தோன்றும் என கூறப்படுகிறது.வாட்ஸ்அப்பில் பிரதான பயன்பாடாக இருப்பது அதன் குழு அம்சமாகும். குடும்ப உறுப்பினர்கள், அலுவலக ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், தகவல் பரிமாற்ற நபர்கள், தொழில் சார்ந்த குழுக்கள் என பல்வேறு வகையில் இந்த குழு அம்சம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இருப்பினும் குழுவில் வழங்கப்பட்டிருக்கும் அனுமதியை பலர் தவறாக பயன்படுத்துவார்கள். தேவையற்ற மெசேஜ், ஃபார்வேர்ட் மெசேஜ், தவறான தகவல் என தொடர்ந்து பகிர்ந்து வெறுப்புக்கு உள்ளாக்குவார்கள். இதுபோன்ற செயல் குழு தொடங்கப்பட்ட நோக்கத்தையே கெடுத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பலரும் குழுவில் இருந்து வெளியேறிவிடுவார்கள். அட்மின்களுக்கு இது தொந்தரவாகும் மன உளைச்சலாகவும் இருக்கும்.

அதுமட்டுமின்றி க்ரூப்பில் பகிரப்படும் பல்வேறு மெசேஜ்களுக்கும் குழு அட்மின்களே பொறுப்பேற்க வேண்டிய நிலை இருந்தது. இந்த தொல்லையில் இருந்து விடுபட குழு ஆரம்பிக்கும் அட்மின்கள் யாரெல்லாம் மெசேஜ் செய்யலாம் என்ற விருப்பத்தை தேர்வு செய்யும் வசதி பயன்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் ஒருவர் தவறாக மெசேஜ் செய்துவிட்டார் அதை க்ரூப் அட்மினால் எதுவும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பொறுப்பேற்கும் நிலைக்கும் குழு அட்மின்கள் தள்ளப்பட்டனர். இதையடுத்து தேவையற்ற பதிவுகளை நீக்கும் வகையிலான புதிய அப்டேட்டை க்ரூப் அட்மின்களுக்கு வாட்ஸ்அப் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த அம்சத்தை பீட்டா பதிப்பில் வாட்ஸ்அப் சோதனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் வாட்ஸ்அப்பில் தற்போது உள்ள டெலிட் ஃபார் எவ்ரிஒன் அம்சமானது மணிநேரங்கள் கணக்கில் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் இது நாட்கள் அளவில் நீடிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அம்சமும் தற்போதுவரை சோதனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த அம்சங்கள் விரைவில் பயனர்களுக்கு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.