ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீஸில் புகார்!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். இந்த நிலையில், சென்னையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் ஆன்லைன் வாயிலாக காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்..
தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் குமார்.