ஒரு மாத குழந்தைக்கு கொரோனா!
கொரோனா பாதித்த ஒரு மாத குழந்தை பிரசாந்த் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் குணமடைந்து சென்னை, ஜன.27,2022: இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா 3வது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா பாதித்த ஒரு மாத குழந்தை ஒன்று கொளத்தூரில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மூலம் குணமடைந்து கடந்த வாரம் வீடு திரும்பியது. இந்த குழந்தை கடந்த சில வாரங்களுக்கு முன் காய்ச்சல் அறிகுறி காரணமாக பிரசாந்த் மருத்துவமனைக்கு வந்தது. அப்போது அந்த குழந்தைக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த குழந்தைக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. குழந்தைக்கு சரியான சிகிச்சை மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதற்காக குழந்தைகள் மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் பிரகாஷ் தலைமையில் நிபுணத்துவம் வாய்ந்த குழந்தை மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் குமார்.