தியாகிகள் தின வீர வணக்க நாளையொட்டி முதல்வர் மரியாதை
சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தியாகிகள் தின வீர வணக்க நாளையொட்டி அவர்களின் படங்களுக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள படங்களுக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார்