செல்போன் கடையில் திருட்டு கொள்ளையர்கள் கைது!

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(30). இவர் அதே பகுதியில் செல்போன் சர்வீஸ் செய்யும் கடையினை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 13ஆம் தேதியன்று இரவு வழக்கம் போல் கடையினை அடைத்துவிட்டு வீட்டிற்க்கு சென்று அடுத்த நாள் காலை கடையினை திறக்க வந்த ராஜேஷ் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைகண்டு அதிர்சி அடைந்துள்ளார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது 2 லேப்டாப்கள், 7 புது செல்போன்கள், சர்வீஸ்க்காக வந்த 5 செல்போன்கள். 3 வாட்ச், 1 ஸ்பீக்கர் பாக்ஸ் மற்றும் கல்லாவில் வைத்திருந்த 35,00 ரூபாய் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து செம்மெஞ்சேரி காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் ராஜேஷ் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரித்த போது மூவரும் ஆவடியை சேர்ந்த சதீஷ்குமார் (எ) டாட்டு சதீw (21), சஞ்சய் (எ) சைக்கோ சஞ்சய்(23) மற்றும் ராகேஷ்(21) என்பதும் செம்மெஞ்சேரி காவல் நிலைய பழைய குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் ராஜேஷின் செல்போன் சர்வீஸ் கடையில் திருடியதையும் ஒப்புக்கொண்ட மூவரிடமிருந்து 2 லேப்டாப், 7 புது செல்போன்கள், சர்வீஸ்க்காக வந்த 5 செல்போன்கள், 3வாட்ச், 1 ஸ்பீக்கர் பாக்ஸ் ஆகியற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதனை தொடர்ந்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குமார்.