உயிர் தத்துவமாய் வாழ்ந்தவர் எம் ஜி ஆர்..

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும் என்கிற பாடல் வரிகளின் உயிர் தத்துவமாய் வாழ்ந்தவர் தான் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் நாடகம் திரையுலகம் அரசியல் பொதுவாழ்வில் உச்சங்களை தொட்டு ஏக சக்கரவர்த்தியாக தமிழ் மண்ணிலே கோலோச்சிய மாபெரும் மனிதர் தான் எம்ஜிஆர் உழைப்பவரே உயர்ந்தவர் என்கிற லட்சியம் விளக்கத்தோடு வாழ்ந்த அவர் ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் என்ற தத்துவம் வரிகளுக்கு ஏற்ப தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை வாரி இறைத்து வள்ளல் என்று பெயரெடுத்தவர் தமிழக அரசியல் வரலாற்றில் பல அற்புதங்களை சாதனைகளை நிகழ்த்தியவர் தான் எம்ஜிஆர் 1952இல் திமுகவில் இணைந்து நேரடி அரசியலுக்கு வந்த அவர் அந்த கட்சியை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதற்கு பெரும் பங்காற்றினார் என்பது வரலாறு அதே திமுகவிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டபோது அண்ணாவின் பெயரில் கட்சியை தொடங்கி 1973 திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் தொடங்கி பலர் தொடர் வெற்றிகளை பெற்று சாதனை படைத்தவர் எம்ஜிஆர் 1977 1980 1984 என தமிழகத்தில் 3 சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களை சந்தித்து மூன்றிலும் தொடர் வெற்றிகளை ஹாட்ரிக் வெற்றி என்பார்களே அத்தகைய மாபெரும் வெற்றியை பெற்று சுமார் பதினோரு ஆண்டுகள் இந்த தமிழ் மண்ணில் நல்லாட்சி நடத்திய நாயகன்தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர் மறைந்து முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு பிறகும் இன்னும் பேசுபொருளாக இருக்கிறார் என்பதுதான் மிகப் பெரிய சிறப்பு புதிதாக தமிழக அரசியல் களத்திற்கு வருபவர்கள் கூட பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் பெயரை உச்சரிக்காமல் இருக்க முடியாது என்கிற நிலை இன்றும் தொடர்கிறது. ஏழை எளிய பாமர மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்த அமரர் எம்ஜிஆர் அவருடைய ஆட்சிக் காலத்தில் இந்த மக்களின் மேம்பாட்டிற்காக மாநிலத்தின் உயர்வுக்காக பாடுபட்டவர் என்பது வரலாற்றுப் பதிவு தன்னிறைவுத் திட்டம் கொண்டுவந்து அரசின் பல திட்டங்களை கிராமத்தை நோக்கி கொண்டு சென்றவர்தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் குடிசைகளுக்கு ஒரு விளக்கு மின் திட்டம் குறு சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிராம பகுதிகளுக்கும் பேருந்து வசதி ஆம்புலன்ஸ் வசதி தாய் சேய் நல விடுதி மாநிலம் முழுமைக்கும் ரேஷன் கடைகள் திறப்பு என்று எண்ணற்ற சாதனைகளை படைத்தவர் தான் எம்ஜிஆர் அவருடைய 105வது பிறந்த நாள் இம்மாதம் ஜனவரி 17ஆம் தேதி அவருடைய பக்தர்களால் ரசிகர்களால் அனுதாபிகள் ஆதரவாளர்களால் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் எம்ஜிஆர் புகழ் மறையாது மங்காது நின்று நிலைத்து நீடித்திருக்கும் என்பது தான் உண்மை.

63-3a7bd-mgr-c7955-ideas-ad3d0-in-3add6-2021-3f0c6-actors-7aa4f-images-ac28f-rare-3f86e-photos—actor—photo.jpg

மூத்த பத்திரிகையாளர் துரை கருணா

மூத்த பத்திரிகையாளர் துரை கருணா