`காதலிக்க மறுத்த இளம்பெண்; இன்ஸ்டாகிராமில்படங்களை பதிவேற்றம் செய்த இளைஞர் கைது!’

சென்னை, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), (23). இவரின் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கு தொடங்கப்பட்டு, அதில் சித்ராவின் படங்களை ஆபாசமாக பதிவுசெய்யப்பட்டு வந்திருக்கிறது. அதைப்பார்த்த சித்ராவின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சித்ரா தரப்பில் திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சித்ராவின் படங்களை சமூகவலைதளத்தில் பதிவு செய்தது யார் என்பதைக் கண்டறிய திருவான்மியூர் போலீஸார் அடையாறு காவல் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை நாடினர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட ராஜேஷுக்கு பள்ளியில் படிக்கும்போது சித்ரா அறிமுகமாகியிருக்கிறார். அப்போது இருவரும் நட்பாக பேசி பழகிவந்திருக்கின்றனர். இந்தச் சமயத்தில் சித்ராவை காதலிக்கும்படி ராஜேஷ் வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு சித்ரா மறுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், இன்ஸ்டாகிராமில் சித்ராவின் பெயரில் போலியான கணக்கு தொடங்கி அதில் சித்ராவின் படங்களை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்திருக்கிறார்.

செய்தி ராஜா தமிழ் மலர் மின்னிதழ்