அலறும் வாக்கி டாக்கி; அதிகார பேச்சு! -நிஐ போலீஸிடம் போலி எஸ்.ஐ
சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் வாட்ச் கடை உள்ளது. கடந்த 2-ம் தேதி இந்தக் கடைக்கு வந்தவர், தன்னை போலீஸ் எஸ்.ஐ என கடை ஊழியர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது வாக்கி டாக்கி சத்தம் போலீஸ் எஸ்.ஐ பேன்ட் பாக்கெட்டிலிருந்து கேட்டுக் கொண்டே இருந்தது. பின்னர் கடையிலிருந்த வாட்ச்களின் மாடல்களை போலீஸ் எஸ்.ஐ் பார்த்துவிட்டு 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு வாட்ச்களை வாங்கினார். பின்னர் அதற்குரிய பணத்தை செலுத்த சென்ற போலீஸ் எஸ்.ஐ, பர்சை வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்துவிட்டேன். என்னுடைய வீடு பக்கத்தில்தான் இருக்கிறது. கடையிலிருந்து ஒருவரை என்னோடு அனுப்பி வையுங்கள், பணத்தை கொடுத்து அனுப்புகிறேன் என்று போலீஸ் அதிகாரத்தில் கூறினார்.
செய்தி மீனாட்சி தமிழ் மலர் மின்னிதழ்