புத்தாண்டு காலண்டர்… ஹிந்துக்களின் கோபத்தை தூண்டும் திமுக!
கிறிஸ்தவ, முஸ்லிம் மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் திமுக தலைவர்கள், ஹிந்து மத பண்டிகைகளான தீபாவளி உள்ளிட்டவற்றுக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து ஹிந்து அமைப்புகளும், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. இதேபோன்று, திமுக ஆதரவு தனியார் தொலைக்காட்சியில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட ஹிந்துக்களி்ன் பண்டிகை தினங்களில் ஒளிபரப்பப்படும் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த விளம்பரத்தில், விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்றே சொல்லப்பட்டு வருவதும் ஹிந்துக்கள் மத்தியி்ல் எரிச்சலை மூட்டி வருகிறது. இவையெல்லாம் போதாதென்று, ஆங்கில புத்தாண்டையொட்டி திமுக பிரமுகர் ஒருவர் அண்மையில் அச்சிட்டுள்ள தின காலண்டரில் ஹிந்து பண்டிகை தினங்களை, அரசு விடுமுறை நாட்கள் என்று குறிப்பிட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி மீனாட்சி தமிழ் மலர் மின்னிதழ்