தமிழ்நாடு சட்டசபை : சிறப்பாக செயல்படுகிறார்.. முதல்வர்

தமிழக சட்டப்பேரவையின் 2022 ஆம் ஆண்டுக்கான முதம் கூட்டம் இன்று கூடியுள்ளது. ஓமிக்ரான் பரவல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தான் நடைபெறுகிறது. இன்றைய நிகழ்வுகள் அவையில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வழக்கம் போல தலைமை செயலகத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்ததால் மீண்டும் சென்னை கலைவாணர் அரங்கத்திலேயே சட்டசபை கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செய்தி ராகுல் தமிழ் மலர் மின்னிதழ்