ரயிலில் மாணவர்கள் ரகளை; மாறுவேட போலீஸ்
ரயில்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களை பிடிக்க, ரயில்வே பாதுகாப்பு படையினர் மாறுவேடத்தில் பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்கும் மாணவர்களால், ‘ரூட் தல’ பிரச்னையில் துவங்கி, ரகளை, ஓடி வந்து தாவி ஏறும் சாகசம், பிறந்த நாள் கொண்டாட்ட அடாவடி என, பயணியருக்கு தொந்தரவு ஏற்படுத்தும் சம்பவங்கள் குறித்த புகார்கள் தொடர்கின்றன.இதை தடுக்க, போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் ஒருங்கிணைந்து நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரி கூறியதாவது:பயணியருக்கு மாணவர்களால் இடைஞ்சல் வருவதை தடுக்க, அவர்களின் எதிர்காலம் கருதி அமைதியான பல நடவடிக்கைகள் எடுத்தும் பயனற்ற நிலையே உள்ளது.நேற்று முன்தினம், வேளச்சேரியில் இருந்து திருவள்ளூர் சென்ற ரயிலில், அபாய சங்கிலியை இழுத்து, கல்லுாரி மாணவர்கள் கடும் ரகளை செய்துள்ளனர்.
செய்தி ராகுல் தமிழ் மலர் மின்னிதழ்