அமைச்சரவை மாற்றம்.. முதல்வருக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்..
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் எப்போது வேண்டுமானாலும் பெரிய மாற்றம் வரலாம்,
சுமார் 7 அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லை என ரிப்போர்ட் சொல்கிறது. முதலில் ஆட்சி பொறுப்பேற்றதும் 100 நாளில் அமைச்சர்களின் செயல்பாடுகளை சீர்தூக்கி பார்க்கப்பட்டு அவர்களுக்கு மதிப்பெண் வழங்கி இருந்தார் முதல்வர் ஸ்டாலின். 100 நாட்கள் என்பது மிக குறுகிய காலம் என்பதால், மேலும் 3 மாதங்கள் அவகாசம் தரலாம் என ஸ்டாலினுக்கு யோசனை சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் அமைச்சரவையிலிருந்து சிலருக்கு கல்தாவும், சிலருக்கு இலாகா மாற்றமும் செய்ய ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.
செய்தி ராகுல் தமிழ்மலர் மின்னிதழ்