மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வு..?அன்பில் மகேஷ்
2022 ஜனவரி மாதத்தில் பள்ளிகளுக்குத் திருப்புத் தேர்வு நடைபெறும். 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெறும். 2022 ஜனவரி முதல் வாரம் 3 ஆம் தேதி பள்ளிகள் திட்டமிட்டப்படி தொடங்கும். ஒமைக்ரான் பரவலால் சுழற்சி முறை வகுப்புகள் நடத்துவது குறித்தோ, ஆன்லைன் வழி கல்வி முறையை பின்பற்றுவதோ குறித்தோ முதல்-அமைச்சர் அலுவலக ஆலோசனையின்படி முடிவெடுப்போம்” என்று அவர் தெரிவித்தார்.
செய்தி மீனாட்சி தமிழமலர் மின்னிதழ்