பாலியல் தொல்லையால் சிறுமி தற்கொலை;

ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மீர் மாவட்டத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ரிகோ என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் படிப்பை நிறுத்தி அந்த சிறுமி வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வெளியே வராத நிலையில் கதவைத் தட்டியும் திறக்கவில்லை.