தமிழகத்தில் ‘ஒமைக்ரான்’ ஊரடங்கு: 31ல் அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 97 பேருக்கு ‘எஸ் ஜீன்’ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில், 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 18 பேர் குணமடைந்துள்ள நிலையில், 16 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் உள்ள மரபணு பரிசோதனை மையத்தில், ஒமைக்ரான் பாதிப்பை கண்டறிய முடியும்.புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. வரும் 31ம் தேதி மருத்துவ வல்லுனர் குழுவினருடனான ஆலோசனைக்கு பின், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் அறிவிப்பார்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
செய்தி மீனாட்சி தமிழ் மலர் மின்னிதழ்