மணப்பாறையில் மத்திய மண்டல ஐஜி ஆய்வு
மணப்பாறையில் மத்திய மண்டல ஐஜி ஆய்வு
திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் உட்கோட்டத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
மணப்பாறை காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட மணப்பாறை, வையம்பட்டி,புத்தாநத்தம், துவரங்குறிச்சி, வளநாடு, போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள்,தலைமை காவலர்கள் காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மற்றும் பயிற்சி குறித்து ஐஜி வே.பாலகிருஷ்ணன் வருடாந்திர ஆய்வு செய்தார், காவலர்களின் பயிற்சி சீருடைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஐஜி தியாகேசர் ஆலை மேல்நிலை பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்களுடன் கலந்துரையாடினார். சீருடை ஆய்வின் போது சிறப்பாக பணியாற்றி பதக்கங்களை பெற்று வரும் தலைமை காவலர் ராமுவை பாராட்டினார். மேலும் காவல் ரோந்து பகுதிகளை அதிகப் படுத்தவும் குற்ற எல்லைகளை விரிவுபடுத்தி கண்காணிக்கவும் அதிக அளவில் சிசிடிவி கேமராக்களை பொருத்த அறிவுறுத்திய ஐஜி பெண்கள் -குழந்தைகள் மீதான குற்றங்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார். உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் த.ஜனனிபிரியா, காவல் ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
P. பாலு மணப்பாறை செய்தியாளர்