பத்திரிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

மூத்த பத்திரிகையாளர் மீது பொய்யான வழக்கு! நீதிமன்றத்தில் விடுதலை

சென்னை நவம்பர்-30. மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மீது பொய்யான வழக்கு தொடர்ந்ததில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் நீதிமன்ற தீர்ப்பில் அவரை நிரபராதி என தீர்ப்பு வழங்கி, நீதியரசர் விடுதலை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நான்காம் தூண் என்று அழைக்கப்படும் பத்திரிக்கை துறையானது இயல்பாகவே மிகவும் கவனிக்கப்பட்டு வருகின்ற ஒன்று..
அத்துறையில் பணியாற்றுகின்ற பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறை செய்தியாளர்கள் பலரும் பாதிப்புக்குள்ளாகி வருவது பல ஆண்டுகளாக தொடர்கதையாக இருக்கிறது..
காவல்துறையில் உள்ள ஒரு சில அதிகாரிகள் முழுமையாக விசாரணை செய்யாமல் அவர்கள் மீது பொய்யான வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கிறார்கள். இதைவிட இன்னும் மோசமாக சில ரவுடி கும்பல்களால் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டு உயிரையும் இழக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பத்திரிக்கையாளர்களின் சங்கங்கள் மற்றும் ஊடகத் துறையினர் மற்றும் வார இதழ், மாத இதழ் செய்தியாளர்கள் அனைவரும், தமிழக அரசை வலியுறுத்தி
பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும், பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்குப் போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பல ஆண்டுகளாக தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சிக் காலத்திலும், திமுக ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்தது மேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை முன் வைத்தனர். ஆனால் பத்திரிகையாளர்களுக்கு இதுவரை ஒரு தீர்வு எட்டப்படவில்லை என்பதுதான் உண்மை.

இந்த தடவை திமுக ஆட்சிக்கு வந்தவுடன்
பத்திரிக்கையாளர்களை முன் களப்பணியாளர்கள் என தமிழக அரசு அறிவித்தது பத்திரிகை துறைக்கு ஒரு ஆறுதலான விஷயமாக அமைந்துள்ளது.

மூத்த பத்திரிகையாளர் மீது பொய்யான வழக்கு பதிவு

கடந்த 2018ஆம் ஆண்டில் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக ஆசை மீடியா நெட்வொர்க் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் சிரஞ்சீவி அனீஸ் என்பவர். அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் வேலைக்கு தாமதமாக வருவதும் சரிவர வேலை செய்யாமல் சீக்கிரமே கிளம்பி விடுவதும் வழக்கம். அதுமட்டுமல்ல டிக் டாக் செயலி வழியாக பணிபுரிகின்ற ஆசை மீடியா அலுவலக அடையாள அட்டையை அந்தப்பெண் தனது கழுத்தில் மாட்டிக்கொண்டு மிகவும் ஆபாசமாக ஆட்டமாடி, பாட்டுப் பாடி வீடியோக்களை அரங்கேற்றம் செய்துள்ளார்…
மிக மோசமாக உடை அணிந்து வருவதும் அலுவலகத்தில் மேஜை மீது காலை வைத்து கவர்ச்சியாக இருப்பதுபோல் நூற்றுக்கணக்கான வீடியோக்களை அரங்கேற்றம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனர் அந்தப் பெண்ணுக்கு இரண்டு மாத சம்பளத்தை நிறுத்திவிட்டார்.
சற்று கோபமாகவும் திட்டி விட்டார். அங்கு பணி புரிகின்ற 6க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முன்பாக திட்டியதால் இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் ஊழியர் இவர் மீது 2018 டிசம்பர் 30ஆம் தேதியன்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

முதன் முதலில் புகார் அளித்தது பத்திரிக்கையாளர் தான்

ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் சிரஞ்சீவி அனீஸ் என்பவர். அன்றைய தினமே உடனடியாக அவர் இல்லத்தில் அருகிலுள்ள
நீலாங்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடராஜன் அவர்களிடம்
புகார் அளித்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் மறுநாள் 31-ஆம் தேதியன்று காவல் நிலையம் வர சொன்னதால்
அவருடைய அலுவலகத்தில் பணிபுரிகின்ற அனைத்து ஊழியர்களுடன் சென்று மறுநாள் மீண்டும்
புகார் அளித்துள்ளார்.
குறிப்பு, அந்தப் பெண் ஊழியருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் அனைவரும் அந்தப் பெண்ணுக்கு எதிரானவர்களாக சாட்சி அளிக்க முன்வந்துள்ளனர் அந்தப் பெண் தோழி உட்பட சிரஞ்சீவி அனீஸ் அவர்களுக்கு ஆதரவாக நின்றனர்.

அந்தப் பெண் ஊழியரிடம் இன்ஸ்பெக்டர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடந்த விஷயத்தை கேட்டு அறிந்தார்.
பிறகு அவர், சிரஞ்சீவி அனீஸ் மற்றும் சக ஊழியர்களிடம் உங்கள் அலுவலகம் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில், புகார் அளிக்க சொன்னார்.
சிரஞ்சீவி அனீஸ் அவருக்கு மேலும் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் அவர் புகார் அளிக்க செல்லவில்லை..
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தார்.
அதற்குப் பிறகு இதைப் பயன்படுத்தி அந்த பெண் ஊழியர், இவர் மீது ஜனவரி 2 ஆம் தேதி அன்று மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விஷயமறிந்த சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் தனது வக்கீல் அவர்களுடன் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரை நேரில் சந்தித்து உள்ளார்.
அந்தப் பெண் கொடுத்த புகார் அடிப்படையில் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஒருதலைப்பட்சமாக பேசியதால், சிரஞ்சீவி அனீஸ் அவருடைய வக்கீலுக்கும் இன்ஸ்பெக்டர் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக என்ன செய்வது என்று தெரியாமல் இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளார். அந்த உயர் அதிகாரி உடனேயே வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். எந்த ஒரு விசாரணையும் செய்யாமல், ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள ஆசை மீடியா நெட்வொர்க் அலுவலகம் சென்று அந்தப் பெண்ணுடன் பணிபுரியும் சக பணியாளர்களை விசாரிக்காமலும், சிரஞ்சீவி அனீஸ் மீது நேரடியாக வழக்குப் பதிவு செய்தது ஏன் என்பது மர்மமாக உள்ளது.

போலி பத்திரிக்கையாளர் என தவறான செய்தி வெளியிட்ட பத்திரிக்கை மற்றும் ஊடகத்திற்கு வக்கீல் நோட்டீஸ்

சிரஞ்சீவி அனீஸ், சன் நெட்வொர்க்-ல் உள்ள அனைத்து பத்திரிகைகளில் செய்தியாளராக பணியாற்றி இருக்கிறார். கேப்டன் டிவியில் நிகழ்ச்சி இயக்குனராக இருந்திருக்கிறார். தின இதழ் நாளிதழ் என்ற பத்திரிகையில் கட்டுரை ஆசிரியராக பணியாற்றி 400 நாட்கள் தொடர் கட்டுரை எழுதி உலகளவில் சகாப்தம் படைத்துள்ளார். தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனில் 2018 இல் மத்திய சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பேற்று இருந்தார். தற்போது சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றி வந்திருக்கிறார்.
அவரை போலி பத்திரிக்கையாளர் என
புதிய தலைமுறை டிவி, மற்றும் தி இந்து தமிழ் ஆகிய பத்திரிகையில் திடுக்கிடும் செய்தி வெளியாகி இருந்தது.
இந்தத் தவறான செய்தி காவல் நிலையத்தில் இருந்துதான் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிய தலைமுறை டிவி மற்றும் தி ஹிந்து தமிழ் ஆகிய நிறுவனத்திற்கு சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இவர் தற்போது தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2020 மாநிலத் துணைத்தலைவராக
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனில், அதன் நிறுவனர் மறைந்த கே.காளிதாஸ் அவர்களுடன் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்பெக்டர் தற்காலிக பணி நீக்கம் நீதிமன்றம் உத்தரவு

இவர் மீது வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், இதேபோல், இன்னொருவர் மீது வழக்கு பதிவு செய்து மோசடி செய்ததாக
அந்த மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரை நீதிமன்றம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்தே சிரஞ்சீவி அனீஸ் அவர்களும்
பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. நாமும் சற்று
நடந்த உண்மையை தெரிந்து கொள்ளலாம்.

இந்த பொய்யான வாழ்க்கை சந்தித்ததில் ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனர் சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார். அதுமட்டுமல்லாமல், இதுவரை சுமார் 37 லட்சம் வரை இழந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளர்களுக்கு நன்றி

ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கிற்கு உறுதுணையாக நின்ற
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் நிறுவனர் மறைந்த கே.காளிதாஸ் அவர்களுக்கும், நீதியின் தீர்ப்பு ஆசிரியர் கிருஷ்ணவேணி, உள்ளாட்சி முரசு மேட்டுப்பாளையம் ரபிக், ஊடக செய்தித்துறை ஜுபிடர் ரவி, அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிக்கை‌ நிறுவனர் கவியரசு, வரலாறு பத்திரிக்கை செய்தியாளர் கோடீஸ்வரன், மற்றும் செய்தியாளர்கள் கதிரவன், ரபீக், அன்பரசன், ராகுல், அவர்களுக்கும், ஏனைய சக நண்பர்களுக்கும் பத்திரிக்கை தோழர்களுக்கும் பத்திரிக்கையின் வாயிலாக சிரஞ்சீவி அனீஸ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

நீதி வென்றது
மிக பொறுமையாகவும்
நிதானமாகவும் மூன்று ஆண்டுகள் வழக்கை சந்தித்த ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் சிரஞ்சீவி அனீஸ் அவர்களுக்கு நீதியின் பக்கம் நியாயம் கிடைத்தது. கடந்த நவம்பர் 26 ஆம் தேதியன்று அவருக்கு நீதிமன்றத்தில் நிரபராதி என தீர்ப்பு வழங்கி நீதியரசர் விடுதலை செய்து உள்ளார். இது
பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மற்றும் ஆசை மீடியா நெட்வொர்க் நிர்வாகிகள் மற்றும் செய்தியாளர்கள் அனைவரும் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.