இளம்பெண் மரணத்தில் விசாரணை…

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நலம் அலுவலகத்தில் பெருமாநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் இளம்பெண் இறப்பு குறித்து மாநில மகளிர் உரிமைகள் ஆணையத்தில் இறந்த கிறிஸ்டினா மேரியின் சகோதரி பாஸ் கலா மேரி புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவின் மீது திருப்பூர் மாவட்ட சமூக நலம் அலுவலத்தில் நேற்று 11 11 2021 அன்று விசாரணை நடத்தினர். இந்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்டினா மேரியின் சகோதரி பாஸ் கலா மேரியிடம் வாக்குமூலம் பெற்றனர். கிறிஸ்டினா மேரி எப்படி இறந்தார் என்பதையும் காவல்துறை முதல் தகவல் அறிக்கை எப்படி பதிவு செய்வது என்பதையும் அவிநாசி அரசு மருத்துவமனையில் ஆய்வு குழு அறிக்கை விசாரணை செய்து அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா அவர்கள் உறுதியளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக என். சுதாகர்