புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம்
- 2021 அன்று காலை 10 மணி முதல் புதுச்சேரி ராஜா நகரில் உள்ள பெரியார் படிப்பகத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாணவர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் அவர்களின் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
1) புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் தேர்வு வருகிற நவம்பர் மாதம் 20ஆம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
2) அமைப்பின் மூத்த நிர்வாகிகள் தங்களது பதவியிலிருந்து விலகி புதிய நிர்வாகிகளுக்கு மாநில பொறுப்புகளை வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
3) பட்டியலிடப்பட்ட சமூக மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை நூறு சதவிகித இலவச கல்வியை முந்தைய அரசு கொண்டு வந்ததோடு அத் திட்டத்திற்காக 54 கோடி ரூபாய் ஒதுக்கியதாக சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது. ஆனால் இத்திட்டம் இன்றைய அரசின் மூலமாக கிடப்பில் போடப்பட்டதாக உணர்கிறோம், உடனடியாக பட்டியலிடப்பட்ட மாணவர்களுக்கான இலவசக் கல்வியை அரசு செயல்படுத்த வேண்டும் என இக்கூட்டம் கோரிக்கை வைக்கிறது.
4) சென்டாக் மூலமாக மேற்படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் வருவாய் துறையின் மூலமாக வழங்கப்படும் சான்றிதழ் வைக்க அவசியம் இல்லை என விண்ணப்பித்த நேரங்களில் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களின் அறிவிப்பினால் பல மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களில் வருவாய்த்துறை மூலமாக வழங்கப்பட்ட சான்றிதழ்கள் இல்லாமல் விண்ணப்பித்துள்ளனர் இதுபோன்று விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்கள் திருப்பபட்டுள்ளதாக அறிகிறோம். உடனடியாக கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கல்லூரியில் சேரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
5) அறிவித்த மூன்றாண்டு காலமாக நடத்தப்படாமல் உள்ள காவலர் தேர்வு வருகின்ற நவம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என அறிவித்த மாண்புமிகு காவல்துறை அமைச்சர் அவர்களுக்கு கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் இத்தேர்வு நடத்தப்பட வில்லை என்றால் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்படுகிறது.
6) புதுச்சேரி மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடையாக உள்ள தலைமைச் செயலரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
7) 10 ஆயிரத்து 700 அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என புதுச்சேரி அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
8) நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை புதுச்சேரி அரசு உடனடியாக நிரப்ப வேண்டும், மேலும் ரேஷனலைஸ் என்ற பெயரில் காலியாக உள்ள பணியிடங்களை குறைத்து வெறும் 70 நபர்களை மட்டும் எடுப்பதாக அரசு எடுத்துள்ள முடிவை திரும்பப் பெற்று குறைந்தபட்சமாக 200 இடங்களை நிரப்ப வேண்டும் என இக்கூட்டம் கோரிக்கை வைக்கிறது.
9) விளையாட்டுத்துறையை கவனிக்காத காரணத்தால் விளையாட்டுதுறை சங்கங்களின் மோசடிகளும் அட்டூழியங்கள் அதிகமாகி வருகிறது. இத்தகைய போக்கை கலைக்க விளையாட்டு சங்கங்களை கண்காணிக்கும் ஒரு குழுவை அரசின் மூலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இயக்குனர் அவர்களை வருகின்ற 8. 11. 2021 அன்று சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
10) அமெச்சூர் கேரம் அசோசியேஷன் என்ற பெயரில் செயல்படும் கேரம் விளையாட்டு வீரர்கள் சங்கம் தனது சுயலாபத்திற்காக செயல்படுவதாகவும் கேரம் விளையாட்டு வீரர்களை புறக்கணித்து தனக்கு வேண்டிய நபர்களை தேசிய அளவிலான போட்டிக்கு அழைத்துச் சென்று அநீதி செய்வதாகவும் பத்தாண்டுகளாக உண்மையான கேரம் விளையாட்டு வீரர்களுக்கு உரிய வாய்ப்பு தராமல் மறுத்து வருவதாகவும் எமது அமைப்பிற்கு வந்த புகாரினை அடுத்து விளையாட்டுத்துறையின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வருகின்ற 11 .11. 2021அன்று புதுச்சேரி கல்வி வளாகம் அருகில் மாபெரும் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அனைத்து நிர்வாகிகள் சம்மதத்துடன் ஒப்புதல் பெறப்பட்டது.
நன்றி
இவண்
சீ.சு.சுவாமிநாதன்
நிறுவனர்
புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு .
செய்தி ….தமிழ்மலர் மின்னிதழ் வேல்முருகன்