தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய விழா..

சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பகுதியில் தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்கம் மற்றும் தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் அறக்கட்டளை இணைந்து DECENT WORK DAY தினத்தை கொண்டாடினார் இதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரி வளர்மதி அவர்கள் வழியாக வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு வார விடுப்பு குறைந்தபட்ச மறுநிர்ணயம் இதுபோன்ற பல நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சமுதாய வளர்ச்சிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் டார்வின் மற்றும் உதவிப் பொறியாளர் ஜெயந்தி அவர்கள் முன்னிலையில் சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டது விழாவை வித்தியா மற்றும் சித்ரா ஒருங்கிணைத்தார் இதில் பெரும்பாக்கம் மற்றும் கண்ணகி நகர் பகுதி சார்ந்த வீட்டுவேலை தொழிலாளர்கள் சுமார் 800 நபர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

செய்தியாளர் குமார்