“தச்தோளி அம்பு”

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 197 வது படமான “தச்தோளி அம்பு”(மலையாளம்) திரைக்கு வந்து43ஆண்டுகள்
(27.10.1978) நிறைவடைகின்றது.மலையாள சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்தில் சிவாஜி கணேசன் “தச்சோளி அத்தனகுர்ப்”என்ற முக்கிய வேடமொன்றில் நடித்து மலையாள ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.
இலங்கையில் “பைலட் பிரேம்நாத்” படமும்,இப்படமும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு செய்யப்பட்டது. “தச்தோளிஅம்பு”
படப்பிடிப்பின் போது ஓர் சண்டைக்
காட்சியில் டூப் போடாமல் சிவாஜி நடித்த போது கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டார்.பின் சில மாதங்கள் சிகிச்சைக்குப் பின் சிவாஜி நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டது. 1978 இல் 30 லட்ச ரூபா செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ஒரு கோடி வசூலித்து இமாலய சாதனை புரிந்தது.இப்போது இதன் மதிப்பு பல கோடிகள். மலையாளத்தில் வெளியான முதல் சினிமாஸ்கோப் படமும் இதுவே…!
நடிகர்கள்:
சிவாஜி கணேசன்
பிரேம் நீர்
கே.ஆர்.விஜயா
தீபா
ரவிக்குமார்
எம்.என்.நம்பியார்
கே.பி.உம்மர்
ஜெயன்
மற்றும் பலர்…

இயக்கம்,தயாரிப்பு :நவோதயா அப்பச்சன்
இசை:கே.ராகவன்
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை