கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். வாழ்த்து பெற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L அவர்களிடம் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோதிமணி, கோதண்டவேல், யாஸ்மின் பாஸ்கர் உள்ளிட்ட 8 ஒன்றிய கவுன்சிலர்கள், தையூர் ஊராட்சிமன்றத் தலைவர் எஸ்.குமரவேல் ஆகியோர் வாழ்த்து பெற்றனர். உடன் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.மரகதம் குமரவேல் மற்றும் கழக நிர்வாகிகள்.

செய்தியாளர் சி. கவியரசு