இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, திருச்சி, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், ஆகிய பகுதிகளில் மழை பெய்யக்கூடும். மேலும், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி செல்வராஜ் தூத்துக்குடி