சௌமியா என்ற இளம்பெண் விபத்துக்குள்ளானர்.

சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு எழில் நகர் பகுதியில் வசிக்கும் சௌமியா வயது இருபத்தி மூன்று அவர் பிராட்வேவில் பணிபுரிகிறார் அவர் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் பேருந்தில் செல்வதற்காக அவர் வீட்டில் அருகில் உள்ள பெரும்பாக்கம் பஸ் நிலையத்தில் சென்று பிராட்வே பேருந்தில் பயணம் செல்வதற்காக ஏறினார் அப்போது தனது கால்கள் நழுவி கீழே விழுந்தார் அவருடன் சேர்ந்து மொத்தம் மூன்று நபர்கள் கீழே விழுந்தனர் இரண்டு ஆண்கள் ஒன்று பெண்கள் அதிர்ஷ்டவசமாக இரண்டு ஆண்களுக்கு ஒன்றும் ஆகவில்லை சௌமியா என்ற இளம்பெண் மட்டும் விபத்துக்கு உள்ளனர் இந்த விபத்து அரசு ஓட்டுநர் கவனக்குறைவால் மட்டுமே நடந்தது என்று அப்பகுதி மக்கள் கூறினார்கள் இப்பொழுது அந்த இளம்பெண் சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார் பிறகு அப்பகுதி மக்கள் திரண்டு பெரும்பாக்கம் பஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர் அப்போது காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தனர் அப்பொழுது மக்கள் கூறிய கோரிக்கை இங்கு உரிய நேரத்தில் பேருந்து இயங்குவதில்லை இங்கு நிற்பதற்கு நிழல் கொடை இல்லை அரசு இலவசமாக பெண்களுக்கு அளிக்கப்பட்ட பேருந்து பயணம் அது எங்களுக்கு மிகவும் நன்மை அளிக்கிறது ஆனால் இலவசம் என்ற உடன் எங்களை ஓட்டுநரும் மற்றும் நடத்துனரும் எங்களை மதிக்கவில்லை அது எங்களுக்கு மிகவும் மன அழுத்தம் தருகிறது என்று அவர் புகார் அளித்தார் பிறகு காவல்துறையினர் அறிவுரை சொல்லி மக்களை விலகி செல்ல வைத்தார் செய்தியாளர் குமார்