மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் காணொலி மூலம் ஆய்வு

கோவிட்-19 தடுப்பூசி வழங்கலின் முன்னேற்றம் குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரச் செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார இயக்க நிர்வாக இயக்குநர்களுடன் மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் காணொலி மூலம் ஆய்வு செய்தார்.

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் 2021 ஜனவரி 16 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. 100 கோடி டோஸ்களை நாடு நெருங்கி வருகிறது என்று குறிப்பிட்ட சுகாதாரச் செயலாளர், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி