போக்சோ சட்டத்தில் கைது…
சிறுமியை ஏமாற்றியவர் போக்சோ சட்டத்தில் கைது கடந்த 29.04.2021 அன்று பெருமாநல்லூர் மாகாளியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் தம்பதியின் 16 வயது மகள் கடைக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு சென்றார் திரும்ப அவரை கண்டுபிடித்து தருமாறு04. 05.2021 அன்று பெருமாநல்லூர் காவல் நிலையம் வந்த சிறுமியின் தாயார் புகார் கொடுத்தார் புகாரை பெற்றுக் கொண்ட பெருமாநல்லூர் போலீசார் சிறுமி காணாமல் போன வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் இன்று சிறுமி திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று சிறுமியை அழைத்து விசாரிக்க போலீசாரிடம் தன்னை தேனி சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் மணிகண்டன் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தேனிக்கு அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறினார் சிறுமி அடையாளம் காட்ட சிறுமியுடன் காவல் நிலையம் அழைத்து வந்தது போலீசார் வழக்கை போக்சோ சட்டத்தில் வழக்காக மாற்றம் செய்து மேற்படி மணிகண்டன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர் ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ் மலர் மின்னிதழ் செய்திகள் திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்