விஜயதசமி…
விஜயதசமியின் பிற பெயர்கள்:தசைன், தசரா, தசஹரா என்பன.தசமி என்றால் பிரதமையிலிருந்து பத்தாம் நாள் வரும் திதியாகும்.விஷயதசமி தென்னகப்
பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும், வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது.இந்து நாட்காட்டியில் புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் தசமி திதியன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. முந்தைய ஒன்பது நாட்களும், நவராத்திரி விழாவாக முப்பெரும் தேவியர்களான துர்க்கை,லக்ஷ்மி,சரஸ்வதி ஆகிய மூர்த்திகளை வழிபாடுகளால் கொண்டாடப்படுகிறது.இராமாயணத்தில்,
இராவணன் சீதையை கடத்தினான். சீதையை விடுவிக்குமாறு இராமன் ராவணனிடம் கோரினார், ஆனால் இராவணன் மறுத்துவிட்டார். இந்நிலைமை அதிகரித்து போருக்கு வழிவகுத்தது. இப்போரில் இராமன், இராவணனை, விஜயதசமியன்று அழித்து போரில் வெற்றிபெற்றார் என்று கூறப்படுகிறது. வட இந்தியப் பகுதிகளில் இராமன் இராவணனைக் கொன்ற இந்நாள்,
“ராம்லீலா” என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. பெருந்திரளான மக்கள் மைதானத்தில் கூடி இராவணன் மற்றும் அவனது சுற்றத்தினரது உருவபொம்மையை இராமர் வேடம் தரித்தவரால் அம்பெய்யப்பட்டு எரியூட்டப்படுகிறது.மகாபாரதத்தில் ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசமும், ஓராண்டு அஞாசாதவாசமும்(மறைந்து வாழ்தல்) முடிந்து, மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் விஜயதசமியன்று பெற்றனர் என்று கூறப்படுகிறது.உலகை ஆட்டிப் படைத்த மகிஷாசூரனை அழிக்க தேவியானவள் துர்க்கையாக அவதரித்து, 9 நாட்கள் நீடித்த போரானது, விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
தென்னிந்தியாவில் மகிஷாசுரனை துர்க்கை வென்ற நாளாக கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மைசூரில் மன்னராட்சி நடந்தபோது இந்த நாளில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது மன்னர் ஊர்வலம் வருவது
“தசரா ஊர்வலம்” என அழைக்கப்படுகிறது. இதனையொட்டி கலைநிகழ்ச்சிகள்,
கோலாகலமாக இன்றளவிலும் நடைபெற்று வருகின்றன. அந்த வழக்கத்தை மன்னராட்சி முடிந்த பின்னரும், தற்போதும் கடைபிடித்து வருகின்றனர்.இந்திய கர்நாடக மாநிலத்தில் விஜயதசமியானது ஓர் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் விஜயதசமி அன்று, மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தொன்மை நிறைந்த நம்பிக்கை அம்பிகை அடியார்களுக்கு என்றும் உண்டு . இதற்கு முந்தைய நாளான நவமியில் சரஸ்வதியை
வணங்கி கல்வி, கலை கருவிகளுக்கு பூசை நடத்தி விஜயதசமி அன்று ஆயுதபூசை என தாங்கள் பயன்படுத்தும் தொழிற்கருவிகளுக்கும் வாகனங்களுக்கும் பூசை நடத்துகின்றனர்.சிலர் சரஸ்வதி பூஜையின்றே ஆயுதப் பூஜைகளை நடத்தி விஜயதசமியன்று செயற்படுத்துவர்.
“வெற்றிகள் அருளும் தினமாக விஜயதசமி”நந்நாள் அமைந்திருப்பது சிறப்பிற்குரியது…..
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை