இது தாண்டா….IAS
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசை கதற விட்டு…
இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு பகுதியில் தான் சப் கலெக்டராக பணியில் இருந்த போது…
கேரள முதல்வர் பினராய் விஜயனை அலற விட்ட பெண் IAS சிங்கப்பெண் ரேணு ராஜ்…
விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் யாருடையதாக இருந்தாலும், எந்தக் கட்சியின் ஆதரவு இருந்தாலும்,
ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு இருந்தாலும் சரி…
யாருக்கும் பயப்படாமல்
`9 மாதங்கள்; 90 ஆக்கிரமிப்புகள் கட்டிடங்கள் அகற்றம்!’ – பினராய் விஜயன் ஆட்சியை பதறவைத்த கேரள பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி
முறைகேடாக நிலம் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்..
மூணாறில் ஓடும் முத்திரா ஆற்றின் கரையில் கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து அலுவலகம் கட்டிடம் நதிக்கரை பாதுகாப்பு விதிகளை மீறி உள்ளது என்று உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார்…
இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் சென்ற அரசு தோல்வி அடைந்தது..
எங்கே பிரச்சினை துவங்கியது?…
ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான இடுக்கி தொகுதி முன்னாள் எம்பி ஜாய்ஸ் ஜார்ஜ் குடும்பத்தினர்
முறைகேடாக 20 ஏக்கர் நிலத்தை பட்டா போட்டுள்ளது தெரியவந்துள்ளது..
உடனடியாக அந்த 20 ஏக்கர் நில பட்டாவை ரத்து செய்து விட்டார்…
இதிலிருந்து தான் பெண் சப் கலெக்டருக்கு ஆளும் பினராய் விஜயன் அரசுடன் மோதல் தொடங்கியது…
பினராய் விஜயன் அரசின் அராஜக தேவிகுளம் CPM எம்எல்ஏ ராஜேந்திரன்…
சப் கலெக்டர் ரேணு ராஜ் மீது உண்மைக்குப் புறம்பாக குற்றம் சாட்டியுள்ளார்…
IAS படித்து விட்டால் இவர்களுக்கு எல்லாம் தெரியுமா?, கொஞ்சம் கூட அறிவில்லாதவர்கள் என்று பொது மக்கள் முன்னிலையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது…
டிரான்ஸ்பர் செய்த பினராய் விஜயன் மார்க்சிஸ்ட் அரசு…
இதன் பிறகு சப் கலெக்டர் ரேணு ராஜ்ஜை நிர்வாகதுறையின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார்.
கடைசி நாளிலும் அதிரடி காட்டி கேரள மார்க்சிஸ்ட் அரசை கதற விட்டு…
1999 ஆம் ஆண்டு முறைகேடாக வாங்கப்பட்ட 2.5 ஏக்கர் கொண்ட
4 நிலங்களின் பட்டாக்களை ரத்து செய்து உத்தரவிட்டார்…
மூணாறில் மற்றும் தேவிகுளம் பகுதியில் உள்ள காடுகளை ஆளும் கட்சி ஆதரவுடன் தங்கள் இஷ்டப்படி ரியல் எஸ்டேட் மாபியா கும்பல் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்று அந்த பகுதியில் பணி செய்து வரும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்…
மூணாறில் உள்ள மலைவாசதளத்தில் புற்று நோயாக ஆக்கிரமிப்பு பரவி உள்ளது… இதற்குரிய அறுவைச் சிகிச்சை செய்து தான் இங்கு பணிபுரிந்த
9 மாதங்களில் ஒரு நாள் கூட வீணாக்காமல் 90 ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டார் ரேணு ராஜ்…
கடந்த 9 வருடங்களில் தேவிகுளம் சப் கலெக்டராக பணியில் இருந்த 16 IAS அதிகாரிகள் பணி மாறுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது..
CPM முதல்வர் பினராய் விஜயன் ஆட்சியில் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட
5 வது IAS அதிகாரி ரேணு ராஜ்…
காங்கிரஸ் ஆட்சியிலும் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காமல், ஆக்கிரமிப்புகளை அகற்றிய நேர்மையான சப் கலெக்டரை பணி மாறுதல் செய்யும் வேலையை மட்டும் பார்த்து வந்துள்ளார்கள்…
பாரதி பாடிய புதுமைப் பெண்
ரேணு ராஜ் IAS அதிகாரிக்கு பாராட்டுக்கள்….
தொகுப்பு:- சங்கரமூர்த்தி…. 7373141119