வெற்றி வேட்பாளரை ஆதரித்து ஊரக தொழில்துறை அமைச்சர் பிரச்சாரம் :
வெற்றி வேட்பாளரை ஆதரித்து ஊரக தொழில்துறை அமைச்சர் பிரச்சாரம் :
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி மன்ற கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு/S.R.L இதயவர்மன் Ex.MLA அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்திலும், கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திருமதி/ஜெயந்தி குணசேகரன் அவர்களுக்கு ஆட்டோ சின்னத்திலும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திருமதி/காயத்திரி அன்புசெழியன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு, ஊரக தொழில்துறை அமைச்சர் மற்றும் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு/தா.மோ.அன்பரசன் MLA அவர்கள், திருப்போரூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு/எஸ்.எஸ்.பாலாஜி MLA ஆகியோர் அந்த பகுதியில் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தனர்.
செய்தி : அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்