பொழிச்சலூர் பள்ளிவாசலின் தலைவரை சந்தித்து ஓட்டு சேகரித்தார்
மா.ஞானமணி

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மக்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பாக போட்டியிடும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
மா.ஞானமணி பொழிச்சலூர் ஜாமிஆ பள்ளிவாசலின் ஜமாத் தலைவர் ஹாஜி ஜனாப்/ இமாயதுள்ளாஹ் அவர்களை நேரில் சந்தித்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நிற்பதாக கூறி மண்வெட்டி சின்னத்தில் ஆதரிக்குமாறு தமது வார்டு உறுப்பினர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு தான் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றவுடன் இசுலாமியர்கள் அடக்கம் செய்வதற்காக 2011 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டு கிடப்பில் உள்ள 1.70 சென்ட் ஏக்கர் நிலத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். உடன் ஜாமிஆ பள்ளிவாசலின் இமாம் ஜனாப்/ இத்ரிஸ் மற்றும் ஜமாத்தார்கள் உடன் இருந்தனர்.

செய்தி: S.முஹம்மது ரவூப்