ஸ்பெயின் நாட்டில் பயங்கர காட்டுத்தீ..

ஸ்பெயின் நாட்டின் மலஹா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது.

மாட்ரிட், ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள மலஹா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயால் 17 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. காட்டுத்தீ காரணமாக 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.காட்டுத்தீயை அணைக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்மலர். மின்னிதழ் செய்தியாளர்.
தமீம் அன்சாரி