30Mbps முதல் 1Gbps வரை இணைய வேகத்தை வழங்கும் ஜியோ ஃபைபரின் போஸ்ட்பெய்ட் பிராட்பேண்ட் பிளான்ஸ்!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்காக, ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் பிராட்பேண்ட் திட்டங்களை, ப்ரீபெய்ட் பில்லிங் திட்டங்களுக்கு கூடுதல் விருப்பமாக வெளியிட்டது. இந்த திட்டங்கள் இப்போது 3 மாதங்கள், 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் வாலிடிட்டி என ஒரே பேமெண்ட் விருப்பத்துடன் கிடைக்கிறது. பல பிராட்பேண்ட் நெட்ஒர்க்குகளுக்கு இடையில் போட்டி கடுமையாக இருப்பதால், புதிய மற்றும் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த கூடுதல் பில் பிளான் விருப்பங்களையும் ஜியோஃபைபர் வழங்குகிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிராட்பேண்ட் மற்றும் டாடா ஸ்கை பிராட்பேண்ட், ACT ஃபைபர்நெட் உள்ளிட்ட பிற போட்டியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் அவதாரத்தில் திட்டங்களை வழங்கினாலும் நீண்ட கால பில்லிங் திட்டங்களையே வழங்கி வருகின்றனர். மேலும் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் பிளான்கள் அனைத்தும் 30Mbps மற்றும் 1Gbps இடையிலான சமச்சீர் பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை வழங்குகின்றன.

ஜியோஃபைபர் பிராட்பேண்ட் போஸ்ட்பெய்ட் 3 மாத பில்லிங் பிளான்: சமீபத்தில் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோஃபைபர் பிராட்பேண்ட் போஸ்ட்பெய்ட் பில் திட்டங்கள் காலாண்டு கட்டண விருப்பத்துடன் உங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை சேர்த்துள்ளது. இந்த பிரிவில் உள்ள ஜியோ ஃபைபர் திட்டங்கள் 100 Mbps வேகத்தில் தொடங்கி இணைய வசதியை வழங்குகின்றன. இந்த 100Mbps திட்டத்தை 3 மாதங்களுக்கு பெற ரூ. 2097 செலவாகும். அதே நேரத்தில் நீங்கள் 150Mbps வேகத்திற்கு ரூ. 2997 செலவிட நேரிடும். இதையடுத்து 300Mbps வேகத்திற்கு ரூ. 4497, 500Mbps வேகத்திற்கு ரூ.7497 மற்றும் 1Gbps வேகத்திற்கு ரூ.11997 செலுத்த வேண்டும். அனைத்து திட்டங்களும் அன்லிமிடெட் டேட்டாவை உங்களுக்கு வழங்குகின்றன. நீங்கள் மேற்கண்டவற்றில் எந்த பில்லிங் திட்டத்தை தேர்வு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ் மற்றும் பலவற்றிற்கான தொகுக்கப்பட்ட சந்தாக்கள் உங்களுக்கு கிடைக்கும்.